Feedback
வணக்கம் !
தமிழ்நாடு அரசின் நகர் ஊரமைப்புத் துறையில், திண்டுக்கல் உள்ளூர் திட்டக்குழுமம் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 3ன் கீழ் திண்டுக்கல் முழுமைத்திட்டம் (Master Plan) திருத்தியமைக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முழுமைத்திட்ட திருத்தப்பணிகளின் ஓர் முக்கிய பகுதியாகப் பொதுமக்கள், வர்த்தக, பொறியாளர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பயனாளர்கள் மற்றும் Stack holder -களிடமிருந்து ஆலோசனை மற்றும் கருத்துகள் பெற வேண்டி இப்படிவம் தங்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆகவே பின்வரும் தலைப்புகளில் தங்களது மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் வழங்கிட வேண்டுகிறோம்.
- தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சி மேம்பாட்டிற்கு தேவைகளைக் கட்டமைப்புகள்
- நத்தம் பகுதியில் மா, நிலக்கோட்டை பகுதியில் மலர்கள், வத்தலகுண்டு பகுதியில் தென்னை போன்ற பூர்வீக விவசாய பாதுகாப்பு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டிற்கு தேவையான கட்டமைப்புகள்
- சிறுமலை போன்ற பகுதியில் சுற்றுலா மேம்பாட்டிற்கு தேவையான கட்டமைப்புகள்
- திண்டுக்கல் மலைக்கோட்டை, தாடிக்கொம்பு போன்ற புராதன மற்றும் கலாச்சார அடையாளங்கள் பாதுகாப்பு மற்றும் அவ்விடங்களில் சுற்றுலா விரிவாக்கத்திற்கு தேவையான பணிகள்
- விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகள்
- பசுமை மற்றும் சுற்றுப்புற சூழல் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பிதற்கான ஆலோசனைகள்
- கழிவு நீர், திட்டக் கழிவு மேலாண்மைக்கான ஆலோசனைகள்
- தங்கள் பார்வையில், இணைக்கப்பட வேண்டிய அல்லது புதிதாக உருவாக்கப்பட வேண்டிய சாலைகள் மற்றும் பொதுவாகச் சாலை போக்குவரத்து பண கருத்துகள்
- தங்கள் பார்வையில் புதிய பேருந்து நிலையம் அமைய பொருத்தமான பகுதி மற்றும் அதற்கான காரணங்கள்
- தங்கள் பார்வையில் திண்டுக்கலிற்கு துணை நகரம் தேவையா? தேவையெனில் அதற்குப் பொருத்தமான பகுதி மற்றும் பொதுவாக வீட்டு வசதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுக்கான கருத்துக்கள்
- போக்குவரத்து மேலாண்மை
Please enter your valuable feedback and suggestions below