• உயிர் காக்கும் குருதிக்கொடை!
  • மக்களை ஒன்றிணைக்கும் நாம் தமிழர் படை!

குருதிக்கொடை

யாரெல்லாம் இரத்தம் கொடுக்கலாம்!

 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட யார்வேண்டுமானாலும் குருதிக் கொடை அளிக்கலாம்.

 எடை 45 கிலோவுக்கு குறையாமல் இருக்கவேண்டும்.

 ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் குருதிக்கொடை அளிக்கலாம்.

 உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

யாரெல்லாம் இரத்தம் கொடுக்கக் கூடாது!

 டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள் சிகிச்சைப்பெற்று 6 மாதங்கள் வரை குருதிக்கொடை அளிக்கக்கூடாது.

 மது அருந்தியவர்கள் 24 அடுத்த மணி நேரம் வரை குருதி அளிக்கக்கூடாது.

 மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை குரிதிக்கொடை அளிக்கக்கூடாது.

 கர்ப்பிணிகள், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஓராண்டு வரை குருதிக்கொடை அளிக்கக்கூடாது.

 HIV, மஞ்சள்காமாலை தொற்றுள்ளவர்களின் குருதிக்கொடை அளிக்கக்கூடாது.

 இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் குருதிக்கொடை அளிக்கக்கூடாது.

தட்டை அணுக்கள் தானம் செய்வதற்கு என்னென்ன தேவைகள்!

 குருதிக்கொடை செய்யக்கூடிய எவரும் தட்டை அணுக்கள் தானம் செய்வதற்கு ஏற்றவர்கள்.

 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் தட்டை அணுக்கள் கொடுக்கலாம்.

 உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே தட்டை அணுக்கள் அளிக்க தகுதியானவர்கள்.

 எலுப்பு மஜ்ஜையிலுள்ள மெகாகேரியோசைட் எனப்படும் ஒருவகை பெரிய செல்லிலிருந்து தான் உருவாகின்றன.

 15000 மேல் தட்டை அணுக்கள் அளவை கொண்டு இருக்க வேன்டும். எடை 58 கிலோவிற்கும் அதிகமாக இருக்க வேண்டும்..

 இரத்த அழுத்தம் 120 - 70 ஆக இருக்க வேண்டும்.

 கொடை செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆஸ்பிரின் எடுக்க கூடாது.

 நல்ல புர சிறை அணுக்கள் இருந்தால் குருதி மற்றும் தட்டை அணுக்களை பிரித்தெடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.